ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு : போக்குவரத்து முற்றாக முடக்கம்
ஹட்டன் பகுதியில் மாலை பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, ஹட்டன் குடாகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(09.11.2026) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும், பழக்கடை ஒன்றும் மண்சரிவினால் சேதமடைந்துள்ளன.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் ஹட்டன் - நுவரெலியா வீதியூடான பொதுப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டதுடன், பொதுமக்களும் வாகன சாரதிகளும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, கொட்டகலை கொமர்ஷல் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், ஹட்டன் பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து வீதியில் குவிந்திருந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பயனாக, சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.
வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இதேவேளை, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் பல இடங்களிலும் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதால், அவ்விடங்களில் ஒருவழிப் போக்குவரத்து மாத்திரமே இடம்பெற்று வருகின்றது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிகளில் மேலும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
எனவே, இந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பல ஆண்டுகளாக ஒலித்த பிக்பாஸ் குரல் நிறுத்தம்... ஜுனியர் பிக்பாஸாக மாறிய போட்டியாளர்! தலைகீழாக மாறிய ஆட்டம் Manithan
நேட்டோ அமைப்பிலிருந்து பிரான்ஸ் வெளியேறும்... பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் வாக்குறுதி News Lankasri