ஞானசார தேரரின் ஆடை விவகாரம் - சிறைச்சாலை ஆணையாளர் நாயகருக்கு பறந்த கடிதம்
கலகொடஅத்தே ஞானசார தேரர் மீண்டும் காவியுடையை அணிவதற்கு ஏற்பாடுகளைச் செய்து தருமாறு இட்டபான தம்மலங்கர தேரர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன், இந்த செயல்முறை பௌத்த கோட்பாடு மற்றும் துறவற ஒழுக்கத்தின்படி (தம்ம-விநயம்) மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அதன்படி, தேவையான மதச் சடங்குகளை நடத்துவதற்கு ஒரு திகதியையும், நேரத்தையும் கூடிய விரைவில் வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

இந்த நோக்கத்திற்காக, தன்னையும் உள்ளடக்கிய சங்க சபையின் பத்து பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு சிறைக்கு வருகை தர உள்ளதாக மகாநாயக்க தேரர் சிறை அதிகாரிகளுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
தூதுக்குழுவினரின் வருகைக்குத் தேவையான ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்து, அதுகுறித்த தகவலைத் தெரிவிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையர் நாயகத்திடம் அவர் கோரிக்கை மேலும் விடுத்துள்ளார்.
you may like this video
பல ஆண்டுகளாக ஒலித்த பிக்பாஸ் குரல் நிறுத்தம்... ஜுனியர் பிக்பாஸாக மாறிய போட்டியாளர்! தலைகீழாக மாறிய ஆட்டம் Manithan