நோட்டன் பகுதியில் மண்சரிவு : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
கடும் மழையின் காரணமாக நோட்டன் தியகல 3ம் கட்டை வீதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்டு உள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்
இச்சம்பவமானது இன்று மதியம் 01 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் அவ்வீதியூடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, அதற்கு மாற்று வழியாக நோட்டன் லக்சபான வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கி உள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா நகரில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் லக்சபான வழியாக திருப்பி அனுப்பபடுவதாகவும் இன்றும், நாளையும் சிவனடி பாதமலை பருவகாலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு தியகல வீதியை பயண்படுத்த வேண்டாம் என கினிகத்தேன பொலிஸார்
யாத்திரிகர்கள் நலன் கருதி முன்னறிவித்தல் வெளியிட்டு வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri