உமா ஓயா அருகே மண்சரிவு : முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வு
உமா ஓயா (Uma Oya) அருகில் அமைந்துள்ள கரந்தகொல்ல, மலித்தகொல்ல பிரதேசத்தின் 10வது மைல் அருகே இன்று(25.04.2024) மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் குறித்த இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன்போது யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும், திடீர் அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் பதுளை அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
பதிவான கடும் மழைவீழ்ச்சி
எனினும் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகள் குழுவொன்று இன்று மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் தொடக்கம் இப்பிரதேசத்தில் பதிவான கடும் மழைவீழ்ச்சி காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருந்ததுடன், சுமார் பத்துக் குடும்பங்கள் அதன் காரணமாக பாதிப்பை எதிர்கொண்டிருந்தனர் என்றும் தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள்... இதோ விவரம் Cineulagam
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri
ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை Cineulagam