இஸ்ரேலின் செயற்பாடு தொடர்பில் இலங்கையில் விமர்சனம் வெளியிட்ட ஈரான் ஜனாதிபதி

Ranil Wickremesinghe Sri Lanka Iran Iran-Israel Cold War Ebrahim Raisi
By Benat Apr 25, 2024 05:00 PM GMT
Report

அடக்குமுறை அடிப்படையில் சியோனிச இஸ்ரேலிய ஆட்சி பாலஸ்தீன மக்களை 75 ஆண்டுகளாக ஒடுக்கி வருகிறது. சொந்த நிலங்கள் சூறையாடப்படுகின்றன. எனவே, கொள்ளையர்களுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும் அவர்களின் நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க இடமளிக்க கூடாது  என ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) தெரிவித்துள்ளார். 

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியுடன் நேற்று(24) மாலை இடம்பெற்ற உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி ஆகியோரின் தலைமையில் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றும் போதே ஈரான் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தின் போது இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க படைகள்

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தின் போது இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க படைகள்

மகிழ்ச்சியடைகிறேன்..

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கை போன்ற நாட்டிற்கு எனது குழுவுடன் வர முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஈரான் இஸ்லாமிய குடியரசின் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் வலுவான ஒத்துழைப்புடன் இலங்கையால் பூர்த்தி செய்யப்பட்ட ஒரு சிறந்த திட்டத்தை இன்று மக்களிடம் கையளிக்க கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

iran-israel-war-current-update

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் சாதாரண திட்டமல்ல. இலங்கை மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, ஈரான் தொழில் வல்லுநர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடனும், நிபுணத்துவத்துடனும் செய்து முடித்திருக்கும் திட்டமாகும்.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியின் பின்னர், இலங்கையுடன் வலுவான இருதரப்பு உறவுகளை ஏற்படுத்த ஈரான் முயற்சித்துள்ளது. பல வருடங்களாக இந்த உறவுகள் விரிவடைந்து வருகின்றன. இன்று இரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் வலுவான கலந்துரையாடல் இடம்பெறுகிறது.

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், கலாச்சாரம், விவசாயம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். ஈரானும் இலங்கையும் நட்பு நாடுகள். இரு நாடுகளிலும் சிறந்த ஆற்றல்களும் திறன்களும் உள்ளன. இந்த திறன்களை பகிர்தல் மற்றும் பரிமாற்றம் செய்துக்கொள்ளும் பட்சத்தில் இரு நாடுகளுக்கும், பிராந்தியத்திற்கும், நன்மை கிட்டும் என நம்புகிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக, விவசாய, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஈரான்-இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி கூறுகிறேன்.

சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த நபர்! மேடையில் வைத்து சிரித்த ரணில்

சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த நபர்! மேடையில் வைத்து சிரித்த ரணில்

அச்சுறுத்தல்களாலும் பொருளாதாரத் தடைகளாலும் ஈரான் மக்களைத் தடுத்து நிறுத்த முடியாது. நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்தை எவராலும் சீர்குலைக்க முடியாது என்பதையும் அன்பான இலங்கை மக்களுக்குத் தெரிவிக்கிறேன்.

மேலும், இன்றளவில், ஈரான் இஸ்லாமிய குடியரசை தொழில்நுட்ப வளர்ச்சியில் உயர் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறலாம். பொறியியல் மற்றும் தொழிநுட்பத்துறையில் எமது நிபுணத்துவத்தை இலங்கையுடன் பகிர்ந்துகொள்வதற்கு தயாராக உள்ளோம்.

இதனால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்க எம்மால் முடியும். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்கு சிறந்த உதாரணமாகும்.

பாலஸ்தீன் இன்று முஸ்லீம் நாடுகளுக்கும், முஸ்லிம்களுக்கும், உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது.

அதேநேரம் இது பாலஸ்தீன் மற்றும் காஸா மக்களுக்கு எதிரான பெரும் அநீதியாகும். மனிதாபிமானத்திற்கு எதிரான கொடூரமான குற்றமாகும். அதனால் அனைத்து மக்களும் கவலை கொள்கின்றனர். ஆனால், காசாவிலும் பாலஸ்தீனத்திலும் நடக்கும் இனப்படுகொலை மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏன் சர்வதேச நிறுவனங்களும் அமைப்புகளும் தடுக்க முன்வரவில்லை என்பது கேள்விக்குரியாகும்.

iran-israel-war-current-update

இன்று காஸா எல்லையில் குற்றங்கள் மற்றும் குழந்தைகள் படுகொலைகளை காண்பது வருத்தமளிக்கிறது. முஸ்லிம்கள் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவரும் இதனை கண்டிக்கின்றனர். விலங்குகள் கூட செய்யாத வகையில் மனித உருவில் உள்ள மற்ற உயிரினங்கள் போன்று இவ்வாறான குற்றங்களைச் செய்கின்றனர் என்பதே பலரினதும் நிலைப்பாடாகும்.

பல மாதங்களுக்குப் பிறகும், இந்த குழந்தைக் கொலைகள், படுகொலைகள் மற்றும் அட்டூழியங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இதனை ஆதரிக்கப்பது வருத்தமளிக்கிறது. அதற்கு காரணம் என்னவென மக்கள் கேட்கிறார்கள்.

இறுதிவரை இந்த இனப்படுகொலை அல்லது இந்தக் குற்றங்களுக்கு எதிராக எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையும் ஏனைய மனித உரிமை அமைப்புகளும் அவற்றின் செயல்திறனை இழந்திருப்பது துரதிர்ஷ்டவசமாகும்.

சியோனிச இஸ்ரேலிய ஆட்சியில் காசாவின் அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தும், இந்த அப்பாவி மக்களுக்கு தண்ணீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட உடனடி உதவிகளை வழங்குவது தொடர்பிலான எங்களின் நிலைப்பாடு குறித்தும் இலங்கை ஜனாதிபதியுடன் ஆலோசித்தேன்.

பாலஸ்தீனத்தின் கோரிக்கையும் அதற்கான தீர்வு என்பனவே இங்குள்ள முக்கியமான பிரச்சினையாகும். அதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒரு முழுமையான ஜனநாயக தீர்வைத் தொடங்கியுள்ளது. அதன்படி பாலஸ்தீனியர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படும்.

அதன்படி பாலஸ்தீனியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என அனைவருக்கும் வாக்குரிமை கிடைக்கும். அதன்மூலம் அடுத்த அரசாங்கத்தை அவர்களால் தீர்மானிக்க முடியும். இது நியாயமானதும் ஜனநாயகமுமான முயற்சியாகும்.

அடக்குமுறை அடிப்படையில் சியோனிச இஸ்ரேலிய ஆட்சி பாலஸ்தீன மக்களை 75 ஆண்டுகளாக ஒடுக்கி வருகிறது. சொந்த நிலங்கள் சூறையாடப்படுகின்றன. எனவே, கொள்ளையர்களுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும் அவர்களின் நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க இடமளிக்க கூடாது. அதற்காக முதலில் அடக்குமுறை செய்வோரை விரட்டியடிக்க வேண்டும்.

iran-israel-war-current-update

பின்னர் ​​அவர்களால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதனையடுத்து அடக்குமுறையாளர்களையும் கொள்ளையர்களையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

ஒரு தரப்புக்குச் சொந்தமான நிலங்களையும் பிரதேசங்களையும் இன்னொரு தரப்பு பயன்படுத்தாது அல்லது கையகப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாம் அவர்களை நீதியின் முன் நிறுத்தாவிட்டால், அவர்களின் ஆக்கிரமிப்புகள் தொடரும்.

அவர்கள் தங்கள் மக்களையும், தங்கள் பெண்களையும், குழந்தைகளையும் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறும்படி வற்புறுத்துவார்கள். உலகில் சரியான இடம் கிடைத்துள்ளது என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்.

சியோனிச இஸ்ரேலிய ஆட்சியின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் சர்வதேச நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்வது, குடியிருப்பாளர்களை அவர்களின் நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது போன்ற செயல்களை எவரும், எந்த குழுவும் செய்யக்கூடாது.

எங்களை வரவேற்று உபசரித்த இலங்கை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஈரான் அரசாங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். அத்துடன், இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தக, கலாச்சார உறவுகளை விரிவுபடுத்துவதற்கு எல்லையோ தடையோ இல்லை.

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் நமது இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளும் உறுதியுடன் செயற்பட வேண்டும். இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதால் பல நன்மைகள் கிட்டுமென நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அரச வருமானம் தொடர்பில் நெருக்கடி நிலை! பணத்தை அச்சிட முடியாத நிலையில் இலங்கை

அரச வருமானம் தொடர்பில் நெருக்கடி நிலை! பணத்தை அச்சிட முடியாத நிலையில் இலங்கை

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை - நீதிபதி இளஞ்செழியன் விசனம்

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை - நீதிபதி இளஞ்செழியன் விசனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US