சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த நபர்! மேடையில் வைத்து சிரித்த ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிங்கள உரையினை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் சிங்களத்திலேயே மொழி பெயர்த்து பொதுமக்களிடம் கூறிய சுவாரஷ்ய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது.
மொழி பெயர்ப்பாளரின் சுவாரஷ்ய செயல்
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) அழைப்பின் பேரில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) கலந்து கொண்டு உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைத்தார்.
இதன்போது, இலங்கை மற்றும் ஈரான் ஜனாதிபதிகள், இலங்கையின் ஏனைய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களிடத்தில் உரையாற்றியிருந்தனர்.
@tamilwinnews சிங்களத்தில் பேசியதை சிங்களத்தில் மொழி பெயர்த்த மொழி பெயர்ப்பாளர். #Lankasrinews #Tamilwinnews #Srilanka #raniwickramasinghe #Iran #Irannews ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆங்கிலத்தில் உரையாற்றும் போது அதனை சிங்கள மொழியில் மொழிபெயர்த்து பொதுமக்களிடம் மொழிபெயர்ப்பாளர் அறிவித்துக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில், இடையில் ஜனாதிபதி ஆங்கிலத்தில் தனது உரையை முடித்து கொண்டு சிங்களத்தில் உரையாற்ற ஆரம்பித்தார். எனினும், குறித்த மொழி பெயர்ப்பாளர் ஜனாதிபதியின் சிங்கள உரையினையும் சிங்களத்திலேயே மொழி பெயர்த்து மீண்டும் பொது மக்களுக்கு அறிவித்தார்.
இதனை கண்ணுற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேடையில் வைத்து ஆச்சரியமாக பார்த்ததுடன் அமைதியாக நகைத்து விட்டு தனது உரையை தொடர்ந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri