மதவாச்சி - தலைமன்னார் வரையிலான தொடருந்து சேவை விரைவில் ஆரம்பம்
மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான தொடருந்து சேவையின் ஆயத்த நடவடிக்கை இன்று(19.06.2026) இடம்பெற்றுள்ளது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான தொடருந்து சேவைகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு செல்லும் தொடருந்து பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக குறித்த சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தொடருந்து சேவைகளுக்கான ஆயத்தப்பணி ஆரம்பம்
இதனைத் தொடருந்து குறித்த தொடருந்து பாதைகள் புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில், தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரையிலான தொடருந்து சேவைகளை முன்னெடுக்க இலங்கை புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம்(19) மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் தொடருந்து சேவையின் ஆயத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விரைவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri