பங்களாதேஷ் ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் நிலச்சரிவு: சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
பங்களாதேஷ் - தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காக்ஸ் பஜார் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் அருகில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(06.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ஏற்பட்ட இராணுவ ஒடுக்குமுறை காரணமாக தப்பியோடி, உலகின் மிகப் பெரிய அகதிகள் குடியேற்றமான காக்ஸ் பஜாரில், 12 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் வசித்து வருகின்றனர்.
தொடர் மழைக் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு
காடுகள் அழிக்கப்பட்ட செங்குத்தான மலைச்சரிவுகளில் மூங்கில் மற்றும் பிளாஸ்டிக் தாள்களால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடுகளில் இவர்கள் தங்கியிருந்ததால், தூங்கிக்கொண்டிருந்த போதே இந்த நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

மேலும், பலத்த மழை தொடர்வதால் அந்த ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளை விரைவாக வெளியேற்றும் பணியில் பங்களாதேஷ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால், மேலும் பல அகதிகள் எல்லையை நோக்கி வரக்கூடும் என்ற அச்சமும், அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்பதால் கூடுதல் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 8 மணி நேரம் முன்
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri