பொகவந்தலாவ பகுதியில் மண்சரிவு - 22 பேர் பாதிப்பு(Video)
ஹட்டன்-பொகவந்தலாவ பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக பொகவந்தலாவ பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ - கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகாமையில் மண்சரிவு அபாயம் காரணமாக நான்கு குடும்பங்களை சேர்ந்த 22 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள்
11 வீடுகளைக் கொண்ட லயக் குடியிருப்பு ஒன்றே மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தோட்ட உத்தியோகத்தர்களின் விடுதிகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுள் 11 சிறுவர்கள், 06 ஆண்கள்,
05 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அனர்த்தம் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.


மலையக அரசியல்வாதிகள்
இதேவேளை குறித்த தோட்டத்தில் இதற்கு முன்பும் மண்சரிவு அபாயம் ஏற்பட்ட போது, மலையக அரசியல்வாதிகள் பார்வையிட்டு மாத்திரமே சென்றதாகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri