ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, காலி, கேகாலை, மாத்தளை மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை இன்றைய தினம் (05.05.2023) தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை
மேற்குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களிலுள்ள பல பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஹல்துமுல்ல, ஹாலி எல, பத்தேகம, யக்கலமுல்ல, பல்லேபொல, பசறை, எல்பிட்டிய, நாகொட, கொட்டபொல மற்றும் பஸ்கொட ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு ஏற்படுவதற்கு முன் ஏற்படும் அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
விழிப்புடன் இருக்க வேண்டும்
நிலத்தில் தொடர்ந்து விரிசல்கள் ஏற்படல், ஏற்கனவே உள்ள விரிசல்கள் ஆழப்படுத்தப்படல், மரங்கள் முறிந்து விழுதல், மின் கம்பங்கள், வேலிகள் மற்றும் தொலைபேசிக் கம்பங்கள் சாய்ந்து கிடத்தல் அத்தோடு, சரிவுகளில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தரைகள் மற்றும் சுவர்களில் விரிசல் மற்றும் நீரூற்றுகள் திடீரென தோன்றுதல், சேற்று நீர் வெளிப்படுதல், ஏற்கனவே உள்ள நீரூற்றுகளில் அடைப்பு போன்ற அறிகுறிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், கனமழை தொடர்ந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும் பொது மக்களைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
