கைவிட்டு சென்ற இடங்களில் ரஸ்யர்களின் கண்ணிவெடிகள்! ரஸ்யாவுடன் மோத ஆயுதங்கள் தேவை
உக்ரைனில் தாம் கைப்பற்றிய இடங்களில் இருந்து திரும்பிச் சென்றுள்ள ரஸ்ய படையினர் ஆபத்தான ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் விட்டு சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உக்ரைனிய ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஆக்கிரமிப்பாளர்கள் எல்லா இடங்களிலும் கண்ணிவெடிகளை விட்டுச் சென்றனர்.
அவர்கள் கைப்பற்றிய வீடுகளில். தெருக்களில், வயல்களில். அவர்கள் மக்களின் சொத்துக்களை நாசப்படுத்தியுள்ளனர்.
இந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் உறுதியான தற்காப்பு நடவடிக்கைகளுக்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் உக்ரைனிய பொதுமக்களுக்கான இரவு நேர உரையில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் துருப்புக்கள் ரஸ்யாவின் படைகளை விட தைரியமானவை. ஆக்கிரமிப்பாளர்களை விவேகத்துடனும் தந்திரோபாயங்களுடனும் தோற்கடிப்பதாக ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் உக்ரைன் இன்னும் ஆயுதங்களுக்காக அதன் சர்வதேச பங்காளிகளை நம்பியிருப்பதாகவும் குறிப்பாக, மரியுபோலின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு உக்ரைனிடம் உரிய ஆயுதங்கள் இல்லை என்று ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
