அபாய நிலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள்: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்
மீள்குடியேற்றத்திற்கு திட்டமிடப்பட்ட இடங்களையும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் அபாய நிலையில் உள்ள 10813 இடங்களை ஆய்வு செய்ய சுமார் 5374 கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இடங்கள் ஆய்வு
அவர் மேலும் தெரிவிக்கையில், கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் 1426 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்படக் கூடிய இடங்களை ஆய்வு செய்ய சுமார் 45 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் 12 குழுக்கள் கண்டி மாவட்டத்திற்கு மட்டும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளூர் குழுக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
மீள்குடியேற்றத்திற்கு திட்டமிடப்பட்ட இடங்களையும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும்.
நிலச்சரிவுகள்
டித்வா சூறாவளி காரணமாக 10 மீற்றருக்கும் அதிகமான நிலச்சரிவுகள் ஏற்பட்ட 1241 இடங்களை செயற்கைக்கோள் படங்கள் மூலம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.
10 மீட்டருக்கும் குறைவான நிலச்சரிவுகள் ஏற்பட்ட பல இடங்கள் உள்ளன. நிலச்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகள் ஏற்பட்ட இடங்கள் பல உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |