நில ஆக்கிரமிப்பு பின்னணியில் ஏறாவூர் பற்று பிரதேச சபை...! (Photos)
மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் இருக்கும் பகுதிகளில் சில காணி மாபியாக்களினால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை துணைபோவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் இருக்கும் பகுதிகளில் அனுமதி பெறப்படாத வீட்டுத் திட்டங்கள், வீதி அமைக்கும் பணிகள், சுற்று மதில்கள் என பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவற்றை அமைப்பதற்கான அனுமதிகள் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊடாக பெறப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அனுமதியும் இன்றி வீட்டுத் திட்டம்
மேலும், ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாக பகுதிகளான தளவாய், ஐயன்கேணி, களுவன்கேணி, போன்ற இடங்களில் போலி காணி ஆவணங்களைச் சமர்ப்பித்து கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், தற்போது அப்பகுதிகளில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
அத்துடன், தனியார் நிறுவனம் ஒன்றினால் அரசாங்கத்தின் எந்தவித அனுமதியும் இன்றி வீட்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் நிதியைப் பெற்று போலி காணி உறுதிகளைச் சமர்ப்பித்து ஏழைகளின் பெயரில் உருவாக்கப்படும் இது போன்ற வீட்டுத் திட்டங்களின் பின்னால் உள்ளவர்கள் இதே போன்று, ஏறாவூர் நகர சபைக் குப்பைகளைக் கொட்டுவதற்காக ஏறாவூர் பற்று பிரதேச சபை எல்லைக்குள் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அனுமதி வழங்காது
இந்த காணி குறித்தும், அங்குக் குப்பை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் மக்கள் மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது போன்ற செயற்பாடுகளுக்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை எவ்வாறு அனுமதி வழங்கியது, அனுமதி வழங்காது நடைபெறும் இது போன்ற சட்ட விரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/b1a074db-2e06-4295-8668-45da36d97d4d/23-64916f103a4bb.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d8f076ae-5865-43be-b34b-09ca6f3469a0/23-64916f10af460.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ce0c7042-ee7e-445e-aa73-f94c1a1e1759/23-64916f112b70e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0bab3313-2105-4ff5-b9fc-152160d8e998/23-64916f126d5d4.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/08fb7cdf-83b3-4a27-9d2f-3f08dd81466a/23-64916f12f3efb.webp)
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)
Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)
365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
![பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா?](https://cdn.ibcstack.com/article/87592ec4-9db7-4b06-a590-3e55b177619b/25-67a59318638c0-sm.webp)