வண்ணான்கேணி வடக்கில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி தவிப்பு - அதிகாரிகளுக்கு அவசர கடிதம்
கிளிநொச்சி - வண்ணான்கேணி வடக்கு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கு என சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து, கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
காணி உரிமைக்கான கோரிக்கை
அந்த கடிதத்தில் குறிப்பிடப்படுவதாவது,
"எமது கிராமத்தில் வாழ்ந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்குவதற்கு சொந்தக் காணி இல்லாத நிலையில், உறவினர்களின் வீடுகளிலும், மற்றவர்களின் காணிகளிலும் தற்காலிகமாக தங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு அசௌகரியங்களையும், நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்படியான சூழ்நிலையில், எமது கிராமத்தின் பின்புறமாக அமைந்துள்ள அரசின் ஒதுக்கீட்டுக் காப்புக் காணிகளை, பிரதேச செயலகத்தின் ஊடாக பொதுப் பயன்பாட்டுக்காக (வெகு சமூகத்திற்காக) வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

எனவே, முதற்கட்டமாக காணியற்ற நிலையில் தவித்து வரும் இந்த ஏழை குடும்பங்களுக்கு அந்த காணிகளைப் பகிர்ந்தளித்து, அவர்களுக்கான போக்குவரத்து வீதி வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களின் இந்த அத்தியாவசியத் தேவையையும், வாழ்வாதாரப் பிரச்சினையையும் கருத்தில் கொண்டு, உரிய அதிகாரிகள் மூலம் தமக்கு சாதகமான பதிலை பெற்றுத் தருமாறு வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan