தென்னிலங்கையில் மர்மமான முறையில் மறைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு
காலி, போபே பகுதியில் வாகன பழுது பார்க்கும் நிலையம் ஒன்றின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைக்குண்டு மற்றும் 9 மில்லி மீற்றர் ரகத்தைச் சேர்ந்த ஆறு தோட்டாக்கள் உள்ளிட்டவை இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் அவசர அழைப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கைக்குண்டு, தோட்டாக்கள் மீட்பு
இந்த சோதனையில், வாகன பழுதுபார்க்கும் நிலையத்திற்குப் பின்னால் இருந்த நிலத்தில், சுமார் மூன்று அடி நீளமான பிவிசி குழாய்க்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தக் கைக்குண்டும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த வாகன பழுதுபார்க்கும் நிலையத்தை நடத்தி வரும் உரிமையாளரின் நிலத்திலேயே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை வேறொரு நபரால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவர் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri