வடக்கு - கிழக்கில் தனியார் காணிகளை ஒவ்வொரு பகுதியாக அரசாங்கம் அபகரித்து வருகின்றது: தர்மலிங்கம் சித்தார்த்தன்
வடக்கு, கிழக்கில் தனியார் காணிகளை ஒவ்வொரு பகுதியாக அரசாங்கம் அபகரித்து பல பௌத்த விகாரைகளை கட்டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த விகாரைகள் கட்டப்படுவது என்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் தமிழர்கள் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்படுகின்றது என்பதே குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தமிழர்களின் பிரச்சினை
இதற்கமைய பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரை ஒன்றை அமைத்து அந்த விகாரையை பேணி பாதுக்காக்கும் வகையில் பௌத்த பிக்குகளை கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
இதற்கமைய இந்த அரசாங்கத்திலாவது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்ரக்கப்பட்ட போதிலும் அதற்கான எந்தவித நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,