கல்லடி பாலத்திற்கு அருகில் காணி அபகரிப்பு முயற்சி: முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் காணியொன்றை அடைக்கமுற்பட்ட குழுவினரை அப்பகுதி மக்களும் மாநகரசபை முதல்வர், உறுப்பினர்கள் தடுத்துள்ளனர்.
குறித்த பிரச்சினையை மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதனின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டுவந்ததை தொடர்ந்து உடனடியாக அங்கு சென்ற மாநகர முதல்வர் அங்கு காணி அபகரிப்பு முன்னெடுக்கவந்தாக தெரிவிக்கப்படுவோரிடம் கலந்துரையாடியுள்ளார்.
பல காலமாக இப்பகுதியில் காணிகளை அடைப்பதற்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் அது அப்பகுதி மக்களினாலும் அரசியல்வாதிகளினாலும் தடுக்கப்பட்டுவந்தது.
கல்லடி பகுதி
இந்த நிலையில் இந்த காணிக்கான ஆவனங்கள் உள்ளதாக தெரிவித்து ஒரு தரப்பினர் இந்த காணியை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதோடு இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
குறித்த காணியானது வெள்ளகாலங்களில் கல்லடி பகுதியில் ஏற்படும் வெள்ள நிலைமையினை குறைப்பதற்கான வடிச்சல் பகுதியாக இருந்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது அங்குவந்த பொலிஸார் மற்றும் மாநகர முதல்வர், மாநகரசபை பிரதி முதல்வர், உறுப்பினர்கள் கலந்துரையாடி முறையான அனுமதிகள் கொண்ட ஆவணங்கள் இல்லாமல் காணி அடைப்பதை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்ததுடன் சட்ட நடைமுறைகளை கவனத்தில்கொண்டு செயற்படுமாறும் பணிப்புரை விடுத்தனர்.











அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
