விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானம்: மோடி இரங்கல்
குஜராத் - அகமதாபாத் இல் இடம்பெற்ற விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உதவி
அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தாம் தொடர்பில் இருப்பேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மதியளவில் லண்டன் புறப்பட்ட ஏயார் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        