குடும்பத்திடமிருந்து அபகரிக்கப்பட்ட காணி : மட்டக்களப்பில் நேர்ந்த அவலம்
மட்டக்களப்பு செங்கலடி-சவுக்கடி கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றிடமிருந்து காணி அபகரிக்கப்பட்டு அவர்கள் வீதிக்கு வரும் நிலையில் உள்ளதாக அவல நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் தெரிவிக்கையில், நாங்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பமாகவும் நாங்கள் மிகவும் நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.
அதன் அடிப்படையில் நிரந்தர வதிவிட காணி இல்லாமல் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வாழ்கிறோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனையோ ஏக்கர் அரச காணிகள் பல அதிகாரம் கொண்டவர்களால் அபகரிக்கப்படுவதை நாங்கள் அவதானித்து அதனை எதிர்த்து போராடியிருக்கின்றோம்.
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னணியில் முக்கிய காரணம்! பெஞ்சமினின் முடிவுக்குப்பின் இருக்கும் உண்மை (Video)
கடந்த பல மாதங்களின் முன்பு மட்டக்களப்பு கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் செங்கலடி பிரதேச செயலாளர் மற்றும் சவுக்கடி கிராமசேவையாளர் அறியும் வகையில் எங்களை LRC காணியினுள் குடியமர்த்தினார்.
தற்போது அக்காணியான LRC காணியில் இருந்து எங்களை வெளியேற கூறி அறிவித்தல் தந்தார்கள் நாங்கள் செல்வதிற்கு வேறு இடம் இன்றி அந்த காணியினுள்ளே வசித்து வருகிறோம்.
பொலிஸ் நிலையத்தில் அச்சுறுத்தல்
பல்வேறு அச்சுறுத்தலை விடுத்து அந்த காணியில் இருந்து எங்களை வெளியேற்ற முனையும் போது நாங்கள் சிறு வீடு கட்டி வசிக்கின்றோம். அதனை இடித்து அகற்றுவதாயின் எங்களிற்கு எங்களை குடியமர்த்திய இராஜாங்க அமைச்சர் நஸ்ட ஈட்டினை தர வேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.
இப்படி நாங்கள் கேட்டு கொண்டதன் பின்பு மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரியின் பலத்தை வைத்து கொண்டு மேலும் மேலும் எங்களை அச்சுறுத்தி பொய்யான முறைப்பாடுகளை எங்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்து எங்களை அச்சுறுத்தி பிள்ளைகளுடன் வீதிக்கு அனுப்பி விட்டார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பறிபோன, பறிபோகின்ற காணிகளை ஆதாரத்துடன் சமூகத்திற்கும் மக்களுக்கும் அடையாளம் நான் காட்டி உண்மைகளை கூறும் போது என்னை அடக்கி ஒடுக்க பார்க்கிறார்கள்.
தற்போது எங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிரந்தர காணியோ வீடோ அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லாமல் தெருவில் நிற்கிறோம். எங்களுடைய குடும்ப நிலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சகல அரசியல்வாதிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகந்தனுக்கும் நன்றாகவே தெரியும்.
எங்களுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட பொய்யான முறைப்பாடுகளை நீதியாக விசாரணை செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |