மகிந்த கட்சியை கைவிடுமாறு ரணிலிடம் கோரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சரின் மகன்
அண்மையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ராஜித சேனாரத்னவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் அவரது மகன் சத்துர சேனாரத்னவும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .
ராஜித சேனாரத்ன சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.
சமகால அரசியல்
நலம் விசாரித்துவிட்டு, அரசியல் தகவல்கள் மற்றும் கட்சிகள் தொடர்பிலும் கருத்து பரிமாற்றிக் கொண்டுள்ளனர்.

இதன் போது, பொதுஜன பெரமுன கட்சியுடனான பயணத்தை விரைவில் நிறுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் சத்துர சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam