தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமை: பரப்புரைக் கூட்டத்தில் ரணில் உறுதி

Dollar to Sri Lankan Rupee Ranil Wickremesinghe Central Province Sri lanka election 2024
By Rakesh Sep 09, 2024 01:04 AM GMT
Report

லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டு உரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஹப்புத்தளையில் 08) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

RSS சத்தியலிங்கம் சந்திப்பின் பின்னணி! சஜித் - சுமந்திரன் ஒப்பந்தத்தால் குழப்பம்

RSS சத்தியலிங்கம் சந்திப்பின் பின்னணி! சஜித் - சுமந்திரன் ஒப்பந்தத்தால் குழப்பம்


தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமை: பரப்புரைக் கூட்டத்தில் ரணில் உறுதி | Land And Housing Rights For Plantation Workers

 ஹப்புத்தளை தேர்தல் தொகுதி

''இந்தப் பிரதேசங்கள் பற்றி நான் 75 வருடங்கள் அறிவேன். இன்று குறைபாடுகள் இல்லாத ஹப்புத்தளை தேர்தல் தொகுதிக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகின்றேன்.

2022 ஆம் ஆண்டில் இராணுவ நிகழ்ச்சி ஒன்றுக்காக இங்கு பிரதமராக வந்தபோது அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் நீண்டு கிடந்தன. தொழில் இன்றி மக்கள் அல்லல்பட்டனர். வீடுகளில் முடங்கினோம். எதிர்காலம் கேள்விக்குறியாகத் தெரிந்தது. இவற்றை நிவர்த்திக்க மக்களுக்காக அரசை ஏற்றுக்கொண்டேன். அதன் பின்னர் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.

இதிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவர்களின் நிபந்தனைகளுக்கு அமைய எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் முன்கூட்டியே அறிந்திருந்தேன். அவர்கள் மேலும் இலங்கைக்குக் கடன் தரவும் தயாராக இருக்கவில்லை. கடன் பெறவோ, பணம் அச்சிடவோ முடியாது என்று வலியுறுத்தினர். கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டிருந்தனர். அரசிடம் பணம் இருக்கவில்லை. இறுதியாக வேறு வழியின்றி வரியை அதிகரிக்கும் கடினமாக முடிவை எடுத்தோம்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமை: பரப்புரைக் கூட்டத்தில் ரணில் உறுதி | Land And Housing Rights For Plantation Workers

வருமான வரி

வருமான வரியையும் அதிகரித்தோம். ரூபாவின் பெறுமதி இரட்டிப்பாக அதிகரித்தது. ஆனால் பணம் கிடைக்கவில்லை. அதற்கு மத்தியிலேயே கஷ்டமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், அதன் பயனாக நாட்டின் வருமானம் அதிகரித்தது. டொலரின் பெறுமதி குறைந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாகக் குறைந்தன. ஆனால், மக்கள் கஷ்டம் முற்றாகக் குறையவில்லை.

எனினும், எமது வருமானம் அதிகரிக்கின்றது. 2023 ஆம் ஆண்டு மக்களிடம் ஓரளவு பணம் இருந்தது. அதனை யாருக்கும் பகிரலாம் என்று சிந்தித்தேன். அதன்படியே குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு 'அஸ்வெசும' வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்தினோம்.

லயன் அறைகளில் வசிக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும். எனவே, இவ்வருடத்தில் மேலும் வருமானம் அதிகரிக்கும். தோட்டத் தொழிலாளர் சம்பளமும் அதிகரிக்கும். அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் அதிகரிக்கும். அடுத்த வருடம் மேலும் அதிகரிக்கும்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமை: பரப்புரைக் கூட்டத்தில் ரணில் உறுதி | Land And Housing Rights For Plantation Workers

ரூபாவின் பெறுமதி

ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி விலைகளைக் குறைத்து நிவாரணம் வழங்குவோம். நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்கான இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். இப்போது வௌிநாட்டு வங்கிகளுடன் கொடுக்கல் - வாங்கல் செய்ய முடியும்.

ஐ.எம்.எப்பிடமிருந்து நிவாரணங்கள் கிடைக்கின்றன. கடன் வழங்கிய நாடுகள் மீள் செலுத்த சலுகைக் காலத்தை வழங்கியுள்ளன. இந்த ஒப்பந்தங்களைப் பின்பற்றி முன்னோக்கிச் சென்றால் எமக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்.

எனவே, எனது எதிர்காலத்தை விடுத்து உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானியுங்கள். அநுரவும் சஜித்தும் இவற்றை மாற்றுவதாகக் கூறுகின்றார்கள். அதனால் நெருக்கடிகள் மீண்டும் தலையெடுக்கும். இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவதே இப்போதைய தேவையாகும். அதனால் தன்நிறைவான வருமானத்தை ஈட்ட வேண்டும்.

பழைய முறைகள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக தோட்டத் தொழிலாளர் சம்பளத்தை அதிகரிக்கும் முயற்சிகளை முன்னெடுக்கின்றோம். லயன் அறை முறைகளை முற்றாக ஒழித்துவிட்டு கிராமங்களாக மாற்றியமைப்போம். காணி உறுதிகளையும் மக்களுக்குத் தருகின்றோம். விரும்பியவாறு வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியும். அதனால் தோட்டங்கள் கிராமங்களாக பரிணமிக்கும்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமை: பரப்புரைக் கூட்டத்தில் ரணில் உறுதி | Land And Housing Rights For Plantation Workers

மரக்கறி மற்றும் பழ உற்பத்தி

மரக்கறி மற்றும் பழ உற்பத்திக்கும் தேவையான வசதிகளை மேம்படுத்தித் தருவோம். அதனால் உள்நாட்டு, ஏற்றுமதி உற்பத்திக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். சுற்றுலாத்துறையையும் இங்கு பலப்படுத்த வேண்டும். அதனால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

எதிர்காலத்தில் நாட்டை முன்னேற்றுவோம். டிஜிட்டல் யுகத்தை உருவாக்குவோம். பெண்களையும் கைவிடவில்லை. அதற்குரிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

பெண்கள் சிறுவர் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்துவோம். பெண்களைத் தொழில் சந்தைக்குள் உள்வாங்குவோம். சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களை அமைத்துத் தருவோம். இவற்றுக்காகவே எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கின்றேன்.ஹப்புத்தளை மற்றும் தியதலாவ போன்ற நகரங்களின் அபிவிருத்திக்கு வழிசெய்வேன். எனவே, சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, கிராமங்களும் இருக்காது." - என்றார். 

இறக்குமதியாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

இறக்குமதியாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

டுபாயிலிருந்து இலங்கை வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

டுபாயிலிருந்து இலங்கை வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US