நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வந்துள்ள திட்டம்! இலட்சக்கணக்கானோருக்கு கிடைக்கப்போகும் உரிமை
சொந்த காணிகள் மற்றும் வீடுகளுக்கான பத்திரம் இல்லாத இலட்சக்கணக்கான மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமையை சட்ட ரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
'அனைவருக்கும் காணி' திட்டத்தின் கீழ் காணியற்ற குடும்பங்களுக்கு காணி உரிமையை வழங்கும் நிகழ்ச்சி பிரதமர் அலுவலகத்தில் நேற்று காலை ஆரம்பமானது.
இத்திட்டமானது சுற்றுலா மற்றும் காணி அமைச்சினால் காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் காணிக்கான சட்டப்பூர்வ உரிமை இல்லாத சகலருக்கும் காணி உரிமையை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக நேற்று முதல் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,




