தமிழர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு தலைநகரில் நம்மவர் பொங்கல் - 2026
தமிழர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு, “தலைநகரில் நம்மவர் பொங்கல் – 2026” எனும் பாரம்பரிய விழா நடைபெறவுள்ளது.
பாரம்பரிய பண்பாடும், உற்சாகக் கொண்டாட்டமும் நிறைந்த வகையில், அன்பிற்கினிய உறவுகளும் நண்பர்களும் ஒன்று கூடும் இந்த விழா, எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி, தெகிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹா விஷ்ணு கோவிலில் நடைபெற உள்ளது.
காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இந்த விழா நடைபெறவுள்ள நிலையில் லங்காசிறி சார்பாக மக்கள் அனைவரையும் வருகவருகவென வரவேற்கின்றோம்.
விழாவின் சிறப்பம்சங்கள்
பாரம்பரிய பொங்கல் போட்டி, மாலைக் கட்டும் போட்டி, கோலம் போட்டி, கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
மேலும், போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள முன்பதிவுகளுக்கு இந்த தொலைபேசி இலக்கத்திற்கு 0767060910 அழைக்குமாறு கேட்டுகொள்கின்றோம்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், உங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு இந்த பாரம்பரிய விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.