வெளிநாடொன்றில் நள்ளிரவில் இலங்கை இளைஞனின் வெறியாட்டம் - கடுமையாக தாக்கப்பட்ட பெண்
ஜப்பானின் ஷிபுயா பகுதியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவரை தாக்கி, அவரது உடைமைகளை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்படும் இலங்கை இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான தனுஷ்க ஸ்ரீ நாமல் ஜெயதோங்கா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 21ஆம் திகதி அதிகாலை 3:30 மணியளவில், ஷிபுயாவின் ஜிங்குமே பகுதியில் உள்ள ஒரு வீதியில் பெண் ஒருவர் நடந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தாக்கப்பட்ட பெண்
இலங்கை இளைஞர், அந்தப் பெண்ணை வழிமறித்து அவரது வாயை மூடி தாக்கியுள்ளார். பணம் வழங்குமாறு மிரட்டிய நிலையில் அந்த பெண்ணைக் கீழே தள்ளிவிட்டு, அவரிடமிருந்த 10,500 யென் மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கைகள், முழங்கால்கள் மற்றும் கழுத்துப் பகுதியில் சிறு காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ பொலிஸார் விசாரணை
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணைக்குப் பிறகு சந்தேக நபரான தனுஷ்கவை ஜனவரி 8ஆம் திகதி கைது செய்தனர். விசாரணையின் போது அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பாக, அதே பகுதியில் 20 வயதுடைய மற்றொரு பெண்ணின் பையையும் இதே போன்ற முறையில் ஒரு நபர் பறிக்க முயன்றுள்ளார். அந்த நபரும் தனுஷ்கவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து டோக்கியோ பொலிஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan