வடக்கை ஏன் பாதுகாக்கிறது அரசு.. விளக்கம் அளிக்கும் அரசியல்வாதி
வடக்கை பாதுகாக்கும் அரசாங்கம் தென் பகுதியை கறைப்படிந்த பிரதேசமாக காட்ட முயற்சிக்கிறது என முன்னாள் அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.
கறைப்படிந்த பிரதேசம்
தென் பகுதிக்கு போதை பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் என எல்லாவற்றையும் தொடர்புபடுத்தி கறைபடிந்த பிரதேசமாக்குகின்றனர். ஆனால் அனைத்தும் வடக்கில் தான் நடந்துள்ளது.

பாதாள குழுவினர் வடக்கில் இருந்தே தப்பிச் சென்றுள்ளனர். இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளுக்கும் வடக்கில் இருந்தே சென்றுள்ளனர். ஆனால் வடக்கை பற்றி கதைப்பதில்லை.
இந்த நாட்டை பாதுகாக்க தென்பகுதியில் இருந்தே ஆட்கள் சேர்க்கப்பட்டது. இந்த நாட்டை காப்பாற்றும் போராட்டம் தென்பகுதியில் தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று தவறான பார்வையை ஏற்படுத்தியுள்ளனர்.
புலம்பெயர் தமிழர்கள்
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த வடக்கை பாதுகாக்கின்றனர். போதை பொருள் மற்றும் கஞ்சா எல்லாம் வடக்கிக்கு தான் வருகிறது. ஆனால் அவை குறிப்பிடப்படுவதில்லை.

1971 ஆம் ஆண்டு துரையப்பா கொலை செய்யப்பட்ட போது பொது மக்கள் பாதுகாப்பு சீர்குலைந்து தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலே தமிழீழ போராட்டம் ஆரம்பமானது. வெலிகம பிரதேச சபையின் தலைவர் கொலையின் பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கருத்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்புக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென தெரிவித்திருந்தார். பொதுமக்கள் பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்பே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri