மகிந்த மற்றும் கோட்டாவைப் போல் ரணிலும் தமிழர்களின் எதிரி: கிரியெல்ல எம்.பி
மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆகியோரைப் போல் ரணில் விக்ரமசிங்கவும்(Ranil Wickremesinghe) தமிழ் மக்களின் எதிரியாவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்சுமன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் கூறியதாவது,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு எதிராகவே வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றியடைவார்.
சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் அரசியல் தீர்வு காணப்படும் என்பதுடன் அவர் எப்போதும் மக்கள் பக்கமே நிற்பார். அத்துடன் எந்த அரசியல் தலைவருடன் பகிரங்க விவாதத்துக்குத் சஜித் பிரேமதாச தயாராகவே இருக்கின்றார்” என குறிப்பிட்டுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri