பெண் கைதிக்கு கையடக்கத் தொலைபேசியை வழங்கிய மருத்துவ அதிகாரிக்கு விளக்கமறியல்
பெண் கைதி ஒருவருக்கு இரண்டு கையடக்கத் தொலைபேசி பேட்டரிகள் மற்றும் மின்னேற்றி ஒன்றை வழங்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட போகம்பரை சிறைச்சாலையின் பிரதான மருத்துவ அதிகாரி நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி குறித்த பெண் சிகிச்சைக்காக வந்திருந்த போது, அவரிடம் இந்தப்பொருட்களை ஒப்படைத்தபோது பிரதான மருத்துவ அதிகாரியை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணையின்போது இவர் முன்னரும் பல பெண் கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்கியமையை ஒப்புக்கொண்டார்.
அவர், ஒக்டோபர் 30 ஆம் திகதி தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது விசாரணை முடியும் கேகாலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.