நாட்டிற்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
இந்த ஆண்டின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 11,367 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.இது மொத்த வருகையில் 17.0 சதவீதமாகும்.
சுற்றுலா பயணிகள்
அத்துடன், இந்த ஆண்டின் முதல் சில நாட்களில் ரஷ்யாவிலிருந்து 8,425 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,067 பேரும், ஜேர்மனியிலிருந்து 5,306 பேரும் மற்றும் 3,285 அவுஸ்திரேலிய பிரஜைகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆண்டில் சாதனை அளவாக 2,362,521 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri