உக்ரைனுக்கு இரவு நேர தொடரூந்தில் பயணித்த ஐரோப்பிய தலைவர்கள்!
மூன்று நாடுகளின் தலைவர்கள் தொடரூந்தில் வந்தனர்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி ஆகியோர் இரவு நேர தொடரூந்தில் உக்ரைன் தலைநகர் கியிவ் சென்று தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக இத்தாலிய நாளிதழ் லா ரிபப்ளிகா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கான வேட்பாளராக உக்ரைனின் நிலை குறித்து ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் விண்ணப்பம்
ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட நான்கு நாட்களுக்கு பின்னர் கடந்த பெப்ரவரியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பிக்கும் செயல்முறையை உக்ரைன் ஆரம்பித்தது.
இந்த பயணத்தின் நோக்கம் ஐரோப்பிய ஒற்றுமைக்கான செய்தி என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு போதிய ஆயுதங்களை அனுப்பவில்லை என்று ஏற்கனவே ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் விமர்சிக்கப்பட்டார்.
இந்தநிலையில் இன்றைய பயணத்தின்போது அவரின் உறுதிமொழி பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகாலமாக வாக்குறுதியளிக்கப்பட்ட ஆனால் இன்னும் வழங்கப்படாத கனரக ஆயுதங்கள் குறித்து Scholz உறுதியளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.