ரவிராஜ் படுகொலை வழக்கில் முன்னிலையான கே.வி தவராசாவுக்கு அச்சுறுத்தல்...
கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மனித உரிமை சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முன்னிலையான போது எனக்கு பல அச்சுறுத்தல்கள் வந்தது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ரவிராஜ் படுகொலை விடயத்தில் நான் முன்னிலையாகி அவரின் உடலை அவரின் துணைவியாரிடம் கொடுக்கும் வரை ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தலையீடவே இல்லை.
இதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே சாட்சி” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
