கிளப் வசந்த கொலை: இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரதான சந்தேகநபர்
கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான லொக்கு பெட்டி {Loku Pety}' எனப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா இலங்கை பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று (04) காலை 7:43 மணியளவில் டுபாயில் இருந்து விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவுக்கு சென்ற சுரேந்திர வசந்த பெரேரா எனும் கிளப் வசந்த என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான லொக்கு பெட்டி கொலை செய்ய திட்டம் தீட்டி பணம் கொடுத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேற்கு மாகாண குற்றப் பிரிவின் தெற்குப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைப்பார்கள் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri