அநுரவின் வலையில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் : கைது செய்யப்படவுள்ள பல அரசியல்வாதிகள்
கடந்த அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளை வகித்த ஆறு மூத்த அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் மற்றும் பிற குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக அரச உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணைகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணையம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பணியகம் ஆகியவை விசாரணைகளை முன்னெடுத்தன.
அதற்கமைய, எதிர்வரும் வாரங்களில் இந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊழல் மோசடி
குருணால், மற்றும் கண்டி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் இருவரும், களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் இருவரும் இந்த பட்டியலில் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களில் சிலர் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர் என சட்டத் துறையின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
