ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான குவைத் சர்வதேச விமான நிலையம் : பற்றி எரிந்த எரிபொருள் தாங்கி
குவைத் சர்வதேச விமான நிலையத்தில், எரிபொருள் தாங்கியை ட்ரோன்கள் குறிவைத்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களை மேற்கோள் காட்டி, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இணையத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்தத் தாக்குதலால் “குறைந்த அளவிலான” சேதம் மட்டுமே ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
குவைத் விமான நிலையம் பலமுறை தாக்குதல்
"சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அவசரகால நடைமுறைகளை உடனடியாகச் செயல்படுத்தினர்.
மேலும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டனர்" என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி கூறியுள்ளார்.

பெப்ரவரி 28 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, குவைத் விமான நிலையம் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
மார்ச் 14 அன்று, "பல ட்ரோன்கள்" மூலம் விமான நிலையம் குறிவைக்கப்பட்டு, அதன் ரேடார் அமைப்பு தாக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. இதில் எந்த உயிரிழப்பு பதிவாகவில்லை.
மார்ச் 8 அன்று விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகள் மீது ட்ரோன்கள் தாக்கின. மேலும், அதற்கு முன்னதாக பயணிகள் முனையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்ததோடு, சில சேதங்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam