டுபாயில் பணியாற்றும் ஆசிரியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் இன்று விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களில் ஒருவர், கம்பஹாவை சேர்ந்த 34 வயது ஆண் எனவும் அவர் டுபாயில் பணி மேற்பார்வையாளராகப் பணி புரிவதாகவும் தெரியவந்துள்ளது.
விமான நிலைய சுங்க அதிகாரிகள்
மற்றொருவர், கண்டியைச் சேர்ந்த 25 வயது பெண் எனவும் அவர் டுபாயில் ஆசிரியராக பணிபுரிகிறார் எனவும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இன்று அதிகாலை 03.15 மணிக்கு ப்ளை டுபாய் விமானம் FZ-569 மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.
அவர்கள் 8 பயணப் பைகளில், 100,000 வெளிநாட்டுத் தயாரிப்பு மென்செஸ்டர் மற்றும் பிளாட்டினம் சிகரெட்டுகள் அடங்கிய 500 சிகரெட் அட்டைப் பெட்டிகளை எடுத்துச் சென்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் இருவரையும் கைது செய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam