குருந்தூர்மலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
குருந்தூர்மலை தொடர்பான வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றையதினம்(25.07.2024) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
B1053/2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் (25) குறித்த வழக்கு இடம்பெற்றுள்ளது.
குருந்தூர்மலை விவகாரம்
இதன்போது, குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணை விவாதங்கள் நடைபெற்று எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்கு மீண்டும் நீண்ட கால இடைவெளியின் பின்னர் தவணையிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்க கூடாது, குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோரை விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸார், பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
அத்துடன், பொலிஸ் நிலையம் சென்றவர்களை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
