குமுதினி படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்(Video)
நெடுந்தீவின் பிரதான கடல்வழி போக்குவரத்து மார்க்கமான குமுதினி படகுச் சேவை மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.
குறித்த படகுச் சேவையானது இன்று(24.08.2023) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது.
திருத்தப்பணிகள்
இந்நிலையில், நேற்று மாலை குமுதினி படகு குறிகாட்டுவானில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு நெடுந்தீவு சென்று தரித்ததுடன், இன்று(24.08.2023) காலை 7 மணிக்கு நெடுந்தீவிலிருந்து குமுதினி படகு குறிகாட்டுவான் நோக்கிப் புறப்பட்டு அங்கிருந்து மீண்டும் நெடுந்தீவுக்கு பயணித்துள்ளது.

யாழ்.குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி செயலிழந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குமுதினி படகு 1968ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான கடல்வழி போக்குவரத்து
சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam