அரைவாசி என்றால் பாதி இல்லை! எரிசக்தி அமைச்சரின் புதிய கணித பாடம்
அரைவாசி என்றால் பாதி என்று அர்த்தம் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி புதிய கணித பாடம் ஒன்றை நடத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே எரிசக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சரிடம் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கடன்களில் அரைவாசி செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் குமார ஜயகொடி, எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கடனில் ஒருபகுதி அடைக்கப்பட்டதையே அரைவாசி கடன் அடைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய கணிதம்
அதன் போது நிகழ்ச்சியின் நெறியாளர் அரைவாசி என்பது பாதிதானே என்று மீண்டும் அமைச்சரிடம் எதிர்க்கேள்வி எழுப்பினார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர் குமார ஜயகொடி, நாங்கள் கணிதப் பாடம் கற்றவர்கள் என்ற வகையில் கூறுகின்றேன், அரைவாசி என்பது பாதியல்ல.
அரைவாசி என்பது நூறில் ஒரு வீதமாகவோ, இருநூற்றி ஐம்பதில் ஒரு வீதமாகவோ கூட இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் மேற்கண்ட கூற்று, சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



