குமார் தர்மசேனவை கைது செய்ய உத்தரவு
இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், தற்போதைய சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார் தர்மசேனவே கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிரட்டியதாக குற்றச்சாட்டு
நாரஹென்பிட்டி பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான வீடு ஒன்றுக்குள் பிரவேசித்து வீட்டில் வசிப்பவரை ஆயுதங்கள் கொண்டு மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குமார் தர்மசேன நிறுவனம் ஒன்றின் தலைவராக கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மசேன, அவரது மனைவி மற்றும் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு
தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமைத்துவ பணிப்பாளரினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் தர்மசேன உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குமார் தர்மசேன தற்போது உலகக் கிண்ண போட்டி கடமைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
