விரைவில் மூதூர்- வெருகல் மக்களுக்கு உதவிகள்! குகதாசன் எம்.பி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூதூர்- வெருகல் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருகோணமலை- மூதூர் வெருகல் பிரதேச பகுதிகளுக்கு நேற்று (05)நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் விஜயம் செய்தார்.
இதன்போது, மூதூர் மற்றும் வெருகல் பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பிரரனர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
அத்தியாவசிய தேவை
இந்தநிலையில், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான விடயங்கள் குறித்தும் அவர்கள் தமது வீடுகளில் மீள் குடியமர்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

முக்கியமாக சுகாதாரத் தேவைகளை வழங்கவும் , மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிவர்த்திக்கவும் ஆவணம் செய்வதாகவும் கூறினார்.

