வெருகல் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ச.குகதாசன் எம்.பியின் வலியுறுத்தல்
மக்களின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண, அரச திணைக்களங்கள் ஒன்றுக்கொன்று இடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
இன்று(16.012026) வெருகல் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற வெருகல் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
அத்துடன், அதிகாரிகள் நேரத்துடன், கூட்டங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும், மக்களுடைய பிரச்சினைகளை தனிப்பட்ட வீட்டுப் பிரச்சினையாகக் கருதி தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸின் நெறிப்படுத்தலில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும் பிரதியமைச்சருமான அருண் ஹேமசந்திர தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கடந்தகால அபிவிருத்திப் பணிகளின் மீளாய்வு மற்றும் எதிர்கால பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அனர்த்த கால மதிப்பீடு மற்றும் அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட மக்களின் குறைபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், வெருகல் பிரதேச சபை தவிசாளர், திணைக்களத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri