கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடிப்படை வசதிகள் கீழ் மட்டத்தில் காணப்படுவதால் நோயாளர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுத்தம் செய்தல் மற்றும் உணவு வழங்கல் உள்ளிட்ட சேவைகள் மோசமடைந்துள்ளதாகவும் நோயாளிகள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஏற்பட்டுள்ள அசமந்த போக்கு
மருத்துவமனையில் உணவு வழங்கலில் பாரிய சிக்கல்கள் தோன்றியுள்ளன. காலை உணவாக ஒரு பப்பாளிப் பழத் துண்டு மற்றும் வேகவைத்த கடலை ஒரு கிண்ணம், பச்சை முட்டைகளுடன் பரிமாறப்படுகிறது.
முட்டைகள் நன்றாக அவிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்கள் தெளிவுபடுத்தத் தவறுவதால் முட்டைகளை நோயாளர்கள் வார்ட்டில் உடைக்கும் போது சிந்தப்படுகின்றன.இதனால் வாட்டில் துர்நாற்றம் வீசுகிறது.

அதை சுத்தம் செய்வதிலும் முன்னுரிமை காட்டப்படுவதில்லை. இதற்கிடையில், நிர்வாக ஸ்திரமின்மை காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri