மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரிய குகதாசன் எம்.பி
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுனாமி குடியிருப்பான நாவற்சோலை ஊரில் 125 குடும்பங்கள் மிக நீண்ட காலமாக காணியில்லாமல் உற்றார், உறவினர் வீடுகளில் தங்கியிருந்து வருகின்றன.
அவர்கள் வாழ்கின்ற பகுதிக்கு பக்கத்திலேயே அரசகாணிகள் இருக்கின்றன. எனவே அவற்றை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசான் என கேட்டுக்கொண்டார்.
முக்கிய பிரச்சினைகள்
குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் யானைகளின் தொல்லைகள் அதிகமாக இருப்பதாகவும், யானை வேலிகள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை எனவும் யானை வேலிக்கு மின்சாரம் மாலை 6:00 மணிக்கு வழங்கப்படுவதாகவும், ஆனால் யானைகள் மாலை 3 மணிக்கு முன்னதாகவே குடியிருப்பு பகுதிக்குள் வந்து விடுவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
எனவே யானை வேலிக்கு மின்சாரம் வழங்குவதனை நேர அவகாசத்தோடு செய்ய வேண்டும் எனவும் யானை வேலியை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு, சலப்பையாறு பகுதியில் 250 மீற்றர் நீளமான பகுதிக்கு யானைவேலி இன்மையால் யானைகள் உள்வருகின்றது. அதனை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வனவிலங்குத் துறையினரை கேட்டுக்கொண்டார்.