ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி
ரஸ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார்.
தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 87 வீதமான வாக்குகள் புடினுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி புடின் ஐந்தாம் தடவையாகவும் ரஸ்யாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வாக்கு பதிவு
கடந்த மூன்று நாட்களாக ரஸ்யாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலப் பகுதியில் பல்வேறு எல்லைப் பகுதிகளில் உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தேர்தலில் புடினை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர் என்பதுடன் அவர்கள் பெயரளவில் தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புடினுக்கு எதிரான போட்டியிடக் கூடிய வலுவான வேட்பாளர்கள் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
ரஸ்யாவின் அபிவிருத்தியை மேற்குலக நாடுகள் தடுக்கின்றன
எதிர்பார்க்கப்பட்டவாறே தேர்தலில் தாம் வெற்றியை பதிவு செய்ததாக புடின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்தியை மட்டுப்படுத்தும் நோக்கில் மேற்குலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளின் முயற்சிகளை முறியடித்து ரஸ்ய மக்கள் தங்களது ஒற்றுமையை தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், இராணுவத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என புடின் தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தலில் 74 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக ரஸ்ய அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 4 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
