இந்த ஆண்டில் இதுவரையில் 700க்கும் மேற்பட்ட கோவிட் மரணங்கள் பதிவு
இந்த ஆண்டில் இதுவரையில் 700க்கும் மேற்பட்ட கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வரையில் இந்த மாதத்தில் 763 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. கோவிட் பெருந்தொற்று பதிவான நாள் முதல் இந்த மாதத்திலேயே இலங்கையில் அதிகளவு மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் 42 கோவிட் மரணங்கள் பதிவானதுடன், இன்று 36 கோவிட் மரணங்கள் பற்றிய விபரங்களைச் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 1441 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் திகதி இலங்கையில் முதலாவது கோவிட் மரணம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மொத்த கோவிட் மரணங்களில் 51 வீதமான மரணங்கள் இந்த மே மாதத்தில் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த பெப்ரவரி மாதம் 155 மரணங்கள் பதிவாகியிருந்தமையே ஒரு மாதத்தில் பதிவான கூடுதல் எண்ணிக்கையிலான மரணங்களாக உள்ளன.