இலங்கை ஒமிக்ரோன் தொற்றாளர்களின் குடும்பத்திற்கு கோவிட் தொற்று
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதென சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் அவர்களுக்கு ஒமிக்ரோன் மாறுபாடு தொற்றியுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த தொற்றாளர்களுக்கு சிறிய நோய் அறிகுறிகள் மாத்திரமே காணப்படுவதாகவும் அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்கள் எனவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்ட இந்திய நாட்டவர் சென்ற கேளிக்கை விடுதி மற்றும் இடங்கள் தேடி பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
