கொத்மலை பேருந்து விபத்து - ஒரு வருட நினைவு நாள் அனுஷ்டிப்பு
கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில், உயிரிழந்தவர்களுக்கான ஒரு வருட நினைவு தினம், இன்று(11.05.2026) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த வருடம், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
நினைவு நாள் அனுஷ்டிப்பு
இதன்போது, பலர் உயிரிழந்துள்ளதுடன், பேருந்து முற்றாக சேதடைந்துள்ளது.

இந்த விபத்து நடந்து, இன்றுடன்(11) ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கொத்மலை பகுதி மக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண்ணுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
you may like this video




