கொட்டாஞ்சேனை கொலையாளிகள் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேக நபர்கள் இருவரும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
பிலியந்தலை, மடபாத்தை பிரதேசத்தில் வசித்த 32 வயதான அருண லக்மால் ஜயவர்த்தன மற்றும் கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த விஜயகுமார் பிரகாஷ் ஆகியோரே பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதில் துப்பாக்கிச் சூடு
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவர் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
T-56 துப்பாக்கியை பயன்படுத்தி அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில், ஒருகொடவத்தையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காட்டுவதற்காக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து பொலிஸார் மீதே துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனையடுத்து, பொலிஸாரின் பதில் துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
