கொழும்பில் தமிழர் மீதான துப்பாக்கிச்சூடு! தீவிர விசாரணையில் பொலிஸார்
கொட்டாஞ்சேனையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கொட்டாஞ்சேனையில் வைத்து சிவலிங்கம் சஷிகுமார் என்ற நபர் கொல்லப்பட்டமைக்கு இரு பாதாள குழுக்களுக்கு இடையிலான மோதல் நிலை காரணமாக அமையலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், குறித்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் இரு குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
விசாரணை
கடந்த 21 ஆம் திகதி, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒரு தொலைபேசி கடைக்குள் துப்பாக்கிதாரி ஒருவர் நுழைந்து அங்குள்ள நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.
T. 56 ரக துப்பாக்கி இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பணியில் இருந்த இரண்டு அதிகாரிகள் அவர்களைத் துரத்திச் சென்று கிராண்ட்பாஸ் ஒருபொடாடவத்த பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் T. 56 துப்பாக்கிகளுடன், அவற்றை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், தங்களிடம் மேலும் ஆயுதங்கள் இருந்ததாகவும், அவை மட்டக்குளிய காக்கை தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பின்னர் மறுநாள் (22 ஆம் திகதி), பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழு, இரண்டு சந்தேக நபர்களையும் அழைத்துச் சென்று, மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு, ஆயுதங்கள் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் போது, சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸ் நிலைய அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்துச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியாதாக கூறப்படுகிறது.
தற்காப்பு நடவடிக்கை
இதன்போது பொலிஸ் அதிகாரிகள் தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் இருவரும் சுடப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, மோதர நிபுனாஎன்ற நபரின் ஒப்பந்தத்தின் பேரில் சுடப்பட்டதாகக் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மோதர பொலிஸாருடன் இணைந்து கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில், சஷிகுமாரின் கொலை, கொட்டாஞ்சேனை மற்றும் கிராண்ட் பாஸ் பகுதிகளில் சிறிது காலமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் புகுடுகண்ண மற்றும் செல்வி ஆகியோரின் மகன்களுக்கு இடையேயான மோதலின் விளைவாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் மோதர பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நபர் 23 ஆம் திகதி பிற்பகல் மோதர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றவாளி
சந்தேக நபரை விசாரித்ததில், வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒரு திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் சந்தேக நபருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கரதப்படும் பிரதாக சந்தேகநபர் இந்த நாட்டில் குற்றங்களைச் செய்து வருவதாகவும், அவரது அறிவுறுத்தலின் பேரில், இடம்பெற்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபருக்கு டி. 56 துப்பாக்கிகளும் வழங்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
இவ்வாறு இறந்தவர் புகுடுகண்ணாவின் நெருங்கிய உறவினர் என்பதும், அவர் வெளிநாட்டில் ஒளிந்து இந்த நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது.
அதன்படி, செல்வியின் மகன்களால் புகுடுகண்ணனுக்கு எதிராக இந்தக் கொலை திட்டமிடப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தையிலும், கொட்டாஞ்சேனை, கல்பொத்த சந்திப்பிலும் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடுகள் புகுடு கண்ணா மற்றும் செல்வி ஆகிய இரு பிரிவினருக்கும் இடையிலான மோதலின் விளைவாக நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
