மீரிகம - கடவத்தை அதிவேக நெடுஞ்சாலையில் கொங்கிரீற் தூண் சரிவு
மீரிகம - கடவத்தை (Mirikama - Kadavatha)அதிவேக நெடுஞ்சாலையில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட பகுதியொன்றின் தூண் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
35 மீற்றர் நீளமான கொங்கிரீற் தூண் ஒன்றே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை இன்னும் இரண்டு தூண்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உரிய நடவடிக்கை
2021ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் கொங்கிரீற் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன.

இந்நிலையில், சரிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதுள்ள அபாயத்தைக் கருத்திற்கொண்டு, வீதியின் 17 கிலோமீற்றரை அண்டிய பகுதியிலுள்ள அனைத்து தூண்களின் தரமும் பரிசோதிக்கப்படவுள்ளன.
எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri