பெண்ணொருவரின் பணப்பையை திருடிய பொலிஸ் அதிகாரி கைது
கண்டியில் (Kandy) ஆடை விற்பனை நிலையமொன்றில் பெண்ணொருவரின் பணப்பையைத் திருடியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்டி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணப்பையின் உரிமையாளர் கடந்த மாதம் 9ஆம் திகதி பணப்பையைக் காணவில்லை எனக் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, ஆடை விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமரா அமைப்பைக் கண்காணித்த பொலிஸார் பெண் ஒருவர் பணப்பையைத் திருடிச் சென்றதை அவதானித்துள்ளனர்.

விசாரணை
இதனடிப்படையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, பொக்காவல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam